LG Velvet ஸ்மார்ட்போன் அறிமுகம், .மே 8 ஆம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பம்.

HIGHLIGHTS

LG Velvet ஸ்மார்ட்போன் அறிமுகம், .மே 8 ஆம் தேதி முதல் முன்பதிவு  ஆரம்பம்.

எல்ஜி நிறுவனத்தின் புதிய வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தென் கொரிய சந்தையில் அறிமுகமாகி இருக்கும் எல்ஜி வெல்வெட் மே 15 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மே 8 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

LG Velvet  சிறப்பம்சங்கள்

– 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளே 
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி ஆக்டாகோர் பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 48 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 5 எம்பி டெப்த் சென்சார்
– ஆண்ட்ராய்டு 10
– டூயல் சிம்
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
– யுஎஸ்பி டைப்-சி
– 4300 எம்ஏஹெச் பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் 

சிறப்பம்சங்களை பொருத்தவரை எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் சினிமா ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி ஆக்டாகோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.  முன்புறம் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் 4300 Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

விலை தகவல் 

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அரோரா வைட், அரோரா கிரே, அரோரா கிரீன் மற்றும் இல்யூஷன் சன்செட் நிறங்களில் கிடைக்கிறது. தென் கொரியாவில் இதன் விலை 899,800 வொன், இந்திய மதிப்பில் ரூ. 55,780 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile