Lava Yuva Star 2 புதிய போன் வெறும் ரூ,6499 யில் அறிமுகம் இதன் அம்சங்கள் மற்றும் தகவலை பாருங்க
Lava அதன் Lava Yuva Star 2 இந்தியாவில் ஒரு புதிய பட்ஜெட் போனை அறிமுகம் செய்தது, இது மிகவும் குறைந்த விலையில் களத்தில் இறக்கியுள்ளது மேலும் இந்த போன் HD+ டிஸ்ப்ளே மற்றும் இது 50MP மெயின் கேமரா கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் சுவாரசிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLava Yuva Star 2 சிறப்பம்சம்.
Lava Yuva Star 2 அம்சங்கள் பற்றி பேசினால் இது 6.75-இன்ச் கொண்ட HD+ ஸ்க்ரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது Android 14 Go Edition ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்கிறது, மேலும் இது டுயல் நெனோ சிம் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த போனின் முன் பக்கத்தில் வாட்டர்-டிராப் ஸ்டைலிஷ் நாடச் வழங்குகிறது.
மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் LAVA Octa-core UNISOC ப்ரோசெசரில் வேலை செய்கிறது மேலும் இந்த போனில் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இதில் லாவா ஸ்மார்ட்போனில் உள்ள சிப்செட் 4 ஜிபி LPDDR4X ரேமுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஸ்டோரேஜ் உதவியுடன் கிட்டத்தட்ட 4 ஜிபி வரை அதிகரிக்க, மொத்த ஸ்டோரேஜ் 8 ஜிபியாகக் கொண்டு செல்லும். இது 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
புகைப்படம் எடுப்பதற்கு, பின்புறத்தில் 13MP AI இரட்டை கேமரா அமைப்பும், முன்புறத்தில் 5MP முன்பக்க கேமராவும் உள்ளன. இது முகத்தைத் திறக்கும் பக்கவாட்டு கைரேகை சென்சார், அநாமதேய அழைப்பு பதிவு போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த போன் IP மதிப்பீடு பெற்றுள்ளது, அதாவது தூசி மற்றும் தண்ணீருக்கு எதிராக லேசான பாதுகாப்பைக் கொண்டுள்ளது.
பேட்டரி 5000mAh ஆகும், இதை 10W டைப்-சி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த தொலைபேசி ஒரு நாள் முழுவதும் காப்புப்பிரதியை எளிதாக வழங்க முடியும்.
Lava Yuva Star 2 விலை தகவல்.
Lava Yuva Star 2 போன் ஒரே ஒரு மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதில் 4GB+64GB ஸ்டோரேஜ் யின் விலை ரூ,6,499 ஆகும் மேலும் இந்த போனை ஆப்லைன் ஸ்டோரில் வாங்கலாம் மேலும் இதில் Radiant Black மற்றும் Sparkling Ivory இரு கலரில் வாங்கலாம்.
இதையும் படிங்க: வெறும் ரூ,10,499 யில் Vivo யின் புதிய AI அம்சம் கொண்ட போன் அறிமுகம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile