பட்ஜெட் விலையில் லாவா Z,92 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Updated on 30-Jan-2019
HIGHLIGHTS

லாவா நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லாவா Z,92 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

லாவா நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லாவா Z,92 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6.22 இன்ச் HD . பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் லாவா இசட்92 ஸ்மார்ட்போன் 8.04 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனினை ஒற்றை கையில் இலகுவாக பயன்படுத்த முடியும். கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனில் எளிதில் கீறல்கள் ஏற்படாது

லாவா Z,92  சிறப்பம்சங்கள்:
 
– 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா
– 3260 Mah . பேட்டரி

புதிய லாவா Z,92 ஸ்மார்ட்போன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்LED . ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

லாவா Z,92 ஸ்மார்ட்போன் ஓசன் புளு-பிளாக் கிரேடியன்ட் ஃபினிஷ் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா Z,92 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் மற்றும் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :