LAVA நிறுவனத்தின் புதிய ஃபீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. லாவா பல்ஸ் என அழைக்கப்படும் இந்த மொபைல் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த சென்சார் கொண்ட உலகின் முதல் மொபைல் போன் என லாவா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
Survey
✅ Thank you for completing the survey!
LAVA Pulse சிறப்பம்சங்கள்
– 2.4 இன்ச் 240×320 பிக்சல் QVGA 65K கலர் டிஸ்ப்ளே – 32 எம்பி ரேம் – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – பாலிகார்போனைட் பாடி, மிலிட்டரி கிரேடு சான்று – டூயல் சிம் ஸ்லாட் – 2ஜி ஜிஎஸ்எம் 900/1800மெகாஹெர்ட்ஸ், ப்ளூடூத் – மைக்ரோ யுஎஸ்பி போர்ட் – கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதி – நம்பர் டாக்கர், போட்டோ ஐகான்கள் – வயர்லெஸ் எஃப்எம் – ஆட்டோ கால் ரெக்கார்டிங் – ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட ஏழு மொழிகளில் இயக்கும் வசதி – 1800 எம்ஏஹெச் பேட்டரி
இந்த மொபைலில் வழங்கப்பட்டுள்ள பல்ஸ் ஸ்கேனரில் கைவிரல் நுனியை வைத்தாலே இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு விவரங்களை திரையில் காண்பிக்கப்படும். இந்த விவரங்களை மொபைல் போனில் சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி மற்றும் குறுந்தகவல் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
சந்தையில் தற்சமயம் கிடைக்கும் எலெக்டிரானிக் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை டிராக் செய்யும் டிஜிட்டல் சாதனங்களுக்கு இணையாக லாவா பல்ஸ் சென்சார் செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனினும், இது மருத்துவ சாதனத்திற்கு மாற்றான சாதனம் இல்லை என லாவா தெரிவிக்கவில்லை.
லாவா பல்ஸ் மொபைல் போன் ரோஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile