லாவா போல்ட் N1 5G : ரூ.7,000 பட்ஜெட்டில் 4K வீடியோ கேமராவுடன் அறிமுகம்!

HIGHLIGHTS

Lava இந்திய சந்தையில் அதன் குறைந்த விலை போனன Lava Bold N1 5G அறிமுகம் செய்துள்ளது

இந்த போன் 8ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் கொண்டுவந்துள்ளது

மேலும் இதன் விலை மற்றும் விரிவான அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

லாவா போல்ட் N1 5G : ரூ.7,000 பட்ஜெட்டில் 4K வீடியோ கேமராவுடன் அறிமுகம்!

Lava இந்திய சந்தையில் அதன் குறைந்த விலை போனன Lava Bold N1 5G அறிமுகம் செய்துள்ளது, இந்த போன் 8ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் கொண்டுவந்துள்ளது மேலும் குறைந்த விலையில் 5000mAh பேட்டரி 13 மெகபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் விரிவான அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Bold N1 5G விலை தகவல்

லாவா போல்ட் N1 5G இன் 4GB + 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.7499, ஆனால் ₹750 வங்கி சலுகைக்குப் பிறகு அதை ₹6749க்கு வாங்கலாம். அதே நேரத்தில், 4GB + 128GB சேமிப்பு வகையின் விலை ரூ.7999, ஆனால் ₹750 பேங்க் சலுகைக்குப் பிறகு அதை ₹7249க்கு வாங்கலாம். இந்த போன் ஷாம்பெயின் கோல்ட் மற்றும் ராயல் ப்ளூ நிறங்களில் வருகிறது. இந்த போன் வீட்டில் இலவச சேவையையும் 1 வருட வாராண்டி வழங்குகிறது. இந்த போன் இ-காமர்ஸ் தளமான அமேசானில் விற்பனைக்குக் கிடைக்கிறது .

Lava Bold N1 5G சிறப்பம்சம்.

லாவா போல்ட் N1 5G 6.75-இன்ச் HD + நாட்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 90Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 20:9 ரேசியோ கொண்டுள்ளது. இந்த போனில் ஆக்டா கோர் UNISOC T765 ப்ரோசெசர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 15 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு இரண்டு Android மேம்படுத்தல்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் உள்ளது, இதை வெர்சுவல் ரேம் வழியாக கூடுதலாக 4 ஜிபி அதிகரிக்கலாம். அதே நேரத்தில், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை அதிகரிக்கலாம் .

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், Bold N1 5G பின்புறத்தில் 13 மெகாபிக்சல் AI கேமரா உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .

இதையும் படிங்க Flipkart Big Billion Days Sale 2025: விற்பனை தேதி அறிவிப்பு பல பொருட்களில் கிடைக்கும் மெகா ஆபர்

கனெக்சன் விருப்பங்களில் 5G, Wi-Fi, ப்ளூடூத் 4.2, OTG சப்போர்ட் ஆகியவை அடங்கும். இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த போனில் பாதுகாப்பிற்காக பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தைக் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo