JioPhone Next உலகின் மிக குறைந்த 4G போனாக இருக்கும் அடுத்த வாரம் ப்ரீ புக்கிங் ஆரம்பம்.

HIGHLIGHTS

ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகமாகிறது

திய ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும்

Jiophone next ஸ்மார்ட்ஃபோன் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்

JioPhone Next உலகின் மிக குறைந்த 4G  போனாக இருக்கும் அடுத்த வாரம் ப்ரீ புக்கிங் ஆரம்பம்.

ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முந்தைய ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களை போன்றே புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலும் ஜியோ நெட்வொர்க் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் மற்ற நெட்வொர்க் சேவைகளை பயன்படுத்த முடியாது. 

ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்கும் போது, நிறுவனங்கள் அவற்றை குறிப்பிட்ட நெட்வொர்க்கில் மட்டும் இயங்கும் வகையில் உருவாக்குகின்றன. அந்த வகையில் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் ஜியோ நெட்வொர்க்கில் மட்டுமே இயக்க முடியும். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலுக்கென பிரத்யேக ரீசார்ஜ் சலுகைகள் அறிமுகம் செய்யப்படலாம்.

JIOPHONE NEXT சந்தையில் எப்போது வரும்?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் ஃபோன் அதாவது ஜியோபோன் நெக்ஸ்டுக்காக ரிலையன்ஸ் ஜியோ கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு மற்றும் பிளே ஸ்டோரிலிருந்து மேம்படுத்தப்பட்ட உகந்த OS- ஐ அடிப்படையாகக் கொண்டது, குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்டுக்காக உருவாக்கப்பட்டது. ஸ்மார்ட்போனின் விலையை ரிலையன்ஸ் இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் ஸ்மார்ட்ஃபோன் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile