மிக குறைந்த விலையில் JioPhone Next இன்று அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

JioPhone Next செப்டம்பர் 10 முதல் இந்தியாவில் கிடைக்கும்

JioPhone Next இந்த அம்சங்களுடன் அறிமுகம்

JioPhone Next இன் சக்திவாய்ந்த அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்

மிக குறைந்த விலையில் JioPhone Next  இன்று அதிகாரபூர்வமாக  அறிமுகம் செய்யப்பட்டது.

கூகிள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ இந்தியாவில் முதல் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போனான ஜியோபோன்  JioPhone Next  இது டச் ஸ்க்ரீன் இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் செப்டம்பர் 10 முதல் இந்தியாவில் கிடைக்கும்..இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
 
ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் அறிவிக்கப்படவில்லை. இது செப்டம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.  

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவின் குறைந்த விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இத்துடன் நாட்டில் முழுமையான 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile