புதிய JIOPHONE 5 வெறும் RS 500 விலையில் விரைவில் அறிமுகமாகும்.

புதிய  JIOPHONE 5  வெறும்  RS 500 விலையில்  விரைவில் அறிமுகமாகும்.
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 999 விலையில் எல்டிஇ வசதி கொண்ட ஜியோபோன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது

புதிய ஜியோபோன் ஃபீச்சர் போன் தான் என்றும் இது முந்தைய ஜியோபோனின் லைட் வெர்ஷன் என கூறப்படுகிறது.

திய ஜியோபோன் துவக்க விலை ரூ. 399 என கூறப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனின் புதிய பதிப்பின் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஜியோபோன் மாடலை அசல் மாடலை விட குறைந்த விலையில் ரிலையன்ஸ் ஜியோவால் அறிமுகப்படுத்த முடியும் ஜியோபோன் 5 ஆக, இந்த புதிய சாதனம் வெறும் ரூ .399 க்கு வழங்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. போகலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 999 விலையில் எல்டிஇ வசதி கொண்ட ஜியோபோன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஜியோபோன் 2 மாடல் வெளியிடப்பட்டது. எனினும், இதைவிட முதல் தலைமுறை ஜியோபோன் அதிக விற்பனையாகி வருகிறது.
 
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தனது மொபைல் போனின் விலையை மேலும் குறைவாக நிர்ணயம் செய்வது குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜியோபோன் 5 பெயரில் புதிய மொபைல் போன் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய ஜியோபோன் ஃபீச்சர் போன் தான் என்றும் இது முந்தைய ஜியோபோனின் லைட் வெர்ஷன் என கூறப்படுகிறது.

லைட் வெர்ஷன் என்பதால் புதிய ஜியோபோன் விலையும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஜியோபோன் துவக்க விலை ரூ. 399 என கூறப்பட்டு உள்ளது. 

இத்துடன் இந்த மொபைலில் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். முந்தைய மாடல்களில் இருந்ததை போன்றே புதிய ஜியோபோனிலும் வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஜியோபோன் 5 சந்தையில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை மொபைல் போன் என்ற பெருமையை பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. புதிய ஜியோபோன் கைஒஎஸ் பிளாட்ஃபார்ம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo