5,000mAh பேட்டரி உடன் வெறும் ரூ, 5,799 விலையில் Itel யின் புதிய போன் அறிமுகம்

Updated on 09-Jan-2026
HIGHLIGHTS

Itel இந்தியாவில் தனது Zeno 20 Max அறிமுகம் செய்தது

itel Zeno 20 Max 3 ஜிபி ரேம் வேரியண்ட் ₹5,799க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இந்த போன் MIL-STD-810H மிலிட்டரி தர சர்டிபிகேட் பெற்றுள்ளது

Itel இந்தியாவில் தனது Zeno 20 Max அறிமுகம் செய்தது.இந்த போன் ஸ்டைல் ​​மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை மனதில் கொண்டு சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது ரூ.7,000க்கும் குறைவான விலை பிரிவில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதாக நிறுவனம் கூறுகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

itel Zeno 20 Max விலை தகவல்.

விலையைப் பொறுத்தவரை, itel Zeno 20 Max 3 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ,,5,799க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 4 ஜிபி ரேம் வேரியண்ட் ₹6,169க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட புதிய வேரியண்ட் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் டைட்டானியம், ஸ்டார்லிட் பிளாக் மற்றும் அரோரா ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் .

itel Zeno 20 Max சிறப்பம்சம்.

இதன் அம்சங்கள் பொறுத்தவரை, Zeno 20 Max ஆனது 90Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்டுடன் 6.6-இன்ச் HD+ IPS டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் டைனமிக் பார் மற்றும் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே ஆகியவையும் உள்ளன, இது கஸ்டமர்கள் நோட்டிபிகேஷன் , கால்கள் மற்றும் பேட்டரி போன்ற தகவல்களை விரைவாகப் பார்க்க அனுமதிக்கிறது. ஆடியோவைப் பொறுத்தவரை, இது DTS பவர்டு சவுண்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க 200MP பவர்பு கேமரா உடன் OPPO Reno15 Pro Mini மற்றும் OPPO Reno15 Proஅறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

இந்த ஸ்மார்ட்போன் பர்போமான்ஸ் T7100 ஆக்டா-கோர் ப்ரோசெசர் இயக்கப்படுகிறது. இந்த போன் 3GB மற்றும் 4GB RAM விருப்பங்களில் வருகிறது, மெய்நிகர் RAM சப்போர்ட் . மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. செக்யுரிட்டிக்காக, Zeno 20 Max பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் பேஸ் அனலாக் வசதியைக் கொண்டுள்ளது.

ஐடெல் ஜெனோ 20 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 13MP பின்புற கேமரா, ஸ்லைடிங் ஜூம் பட்டன் ஆகியவை உள்ளன, இது ஒரு கையால் புகைப்படங்களை எடுப்பதை எளிதாக்குகிறது. முன் கேமராவில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது மேம்பட்ட பட பர்போமன்சுக்காக AI ஐயும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 15W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. பெட்டியில் 10W சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது. Zeno 20 Max 36 மாதங்கள் வரை தாமதமில்லாத பர்போமான்ஸ் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :