4000Mah பவர் கொண்ட ITEL VISION 1 இன்று பிளிப்கார்டில் முதல் விற்பனை.

HIGHLIGHTS

ITEL நிறுவனம் இந்தியாவில் புதிய விஷன் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது

புதிய ஸ்மார்ட்போன் விஷன் 1 எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ITEL நிறுவனம் இந்தியாவில் புதிய விஷன் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் விஷன் 1 எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.088 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் எஸ்சி9863ஏ பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜூலை 18 ஆம் தேதி ஆன இன்று முதல் விற்பனைக்கு வருகிறது

விலை மற்றும் ஆபர்

ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐடெல் விஷன் 1 விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 18 ஆம் தேதி ஆன இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.இதன் ஆபர் பற்றி பேசுகையில் நீங்கள் இதை Axis Buzz க்ரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் .5%டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதை 778ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கலாம்.மேலும் பல ஆபர் தகவலை நீங்கள் அதன் வலைத்தளத்தில் பெறலாம்.

Itel Vision1 சிறப்பம்சங்கள்

– 6.088 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
– ஐஎம்ஜி8322 ஜிபியு
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 0.3 எம்பி டெப்த் சென்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– பின்புறம் கைரேகை சென்சார்
– 4ஜி, வைபை, ப்ளூடூத்
– 4000 எம்ஏஹெச் பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, விஜிஏ டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 Mah பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :