iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.
iQOO Z6 Lite 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Qualcomm Snapdragon 4 Gen 1 செயலியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த ஃபோன் 18W சார்ஜிங்கை ஆதரிக்கும்
iQOO Z6 Lite 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Qualcomm Snapdragon 4 Gen 1 செயலியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் பற்றி பேசுகையில், இது 50MP கேமரா, 5000mAh பேட்டரி, 120Hz FHD + டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த ஃபோன் 18W சார்ஜிங்கை ஆதரிக்கும், ஆனால் இதற்காக அடாப்டரை தனியாக வாங்க வேண்டும். ஏனெனில் அடாப்ட் நிறுவனத்தால் கொடுக்கப்படவில்லை.
Surveyஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 4GB/6GB RAM மற்றும் 64GB/128GB ஸ்டோரேஜ் ஆப்சன் பெறும். இதன் மூலம், கம்பெனி Extended RAM 2.0 வழங்குகிறது, அதாவது இந்த போனின் RAM 2GB வரை விரிவாக்க முடியும். இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. ஆனால் சார்ஜரைத் தனியாக எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த சிறப்பு அம்சம் iQOO Z6 Lite-ல் கிடைக்கும்.
iQOO Z6 Lite 5G இல், கம்பெனி கேமிங்கிற்கான சிறப்பு மோடையும் வழங்கியுள்ளது. இது Ultra Game Mode. போனின் கேமரா பியூச்சர்களிலும் நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. போனின் முதன்மை கேமரா 50MP ஆகும். இது தவிர, போனில் 2MP மேக்ரோ கேமரா உள்ளது. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கான 2MP கேமரா உள்ளது.
iQOO Z6 Lite இரண்டு ஸ்டோரேஜ் வரின்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது – 4GB RAM + 64GB மற்றும் 6GB RAM + 128GB. 4ஜிபி ரேம் + 64ஜிபி விலை ரூ.13,999. அதே நேரத்தில், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி விலை ரூ.15,499. போனின் முதல் விற்பனை செப்டம்பர் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Amazon மற்றும் iQOO.com இல் நடைபெறும். போனில் ரூ.2500 வரை தள்ளுபடி உண்டு. ஆனால் இதற்கு SBI கார்டு வைத்திருப்பது கட்டாயம். முதல் செலில் வாங்கும் போது, 399 ரூபாய்க்கு 18W இணக்கமான சார்ஜர் வழங்கப்படும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile