அடுத்து Iphone SE2 வெளியிட்டு தகவல் லீக் ஆகியுள்ளது.

HIGHLIGHTS

புதிய ஐபோன் SE . மாடலில் ஃபேஸ் ஐ.டி., கேமராக்கள், அதிவேக அனுபவம், புதிய ஐ.ஒ.எஸ். அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது

அடுத்து  Iphone SE2 வெளியிட்டு தகவல் லீக் ஆகியுள்ளது.

ஐபோன் SE  ஸ்மார்ட்போன் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானது. சந்தையில் பலரை கவரந்த ஐபோன் கையடக்க அளவில் பல்வேறு சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருந்தது. முதல் தலைமுறை ஐபோன் எஸ்.இ. வெளியாகி மூன்றாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அந்த வகையில் ஐபோன் எஸ்.இ. 2 பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகியுள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ தெரிவித்தார்.

இத்துடன் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆப்பிளின் ஏ13 பயோனிக் சிபர்செட் இதுவரை வெளியான பிராசஸர்களில் அதிவேகமானதாகும். இதே பிராசஸர் ஐபோன் 11 மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஐபோன் எஸ்.இ. மாடலில் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய ஐபோன் SE . மாடலில் ஃபேஸ் ஐ.டி., கேமராக்கள், அதிவேக அனுபவம், புதிய ஐ.ஒ.எஸ். அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இது பார்க்க ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 4.7 இன்ச் LCD . டிஸ்ப்ளே, டச் ஐ.டிய சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் எஸ்.இ. விலை ஐபோன் 11 மாடலை விட குறைவாக நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. 

இதுதவிர ஆப்பிள் நிறுவனம் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் ஐபேட் ப்ரோ மற்றும் நாய்ஸ் கேன்சலிங் வசதி கொண்ட ஏர்பாட்ஸ் 3 ஹெட்போனையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo