ஐபோன் பேட்டரி ஆப்பிள் கடையில் வெடித்து சிதறியது …

ஐபோன் பேட்டரி ஆப்பிள் கடையில்  வெடித்து  சிதறியது …

ஆப்பிள் ஐபோன் பேட்டரியும் சில நேரங்களில் வெடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஐபோன் பேட்டரி ஆப்பிள் கடையில்வெடித்து  சிதறியது  நிகழ்வு நடைபெற்றுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனையகத்தில் அதிக சூடான ஐபோன் பேட்டரி வெடித்தது, அப்போது அருகில் இருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த தகவலை சுவிஸ் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு, ஆப்பிள் போனை பழுதுபார்க்கும் ஊழியர் ஒருவர் பேட்டரியை எடுக்கும்போது அது வெடித்தது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இந்த விபத்தால் ஊழியரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த மற்ற 7 ஊழியர்களுக்கு காயமில்லை. வெடித்த பேட்டரி மீது மணலை வீசி அனைத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையில் கடைக்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo