சிவப்பு நிறத்தில் ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் இந்தியாவில் வெளியானது

சிவப்பு நிறத்தில்  ஆப்பிள்  ஐபோன் 8 மற்றும்  8 பிளஸ் இந்தியாவில் வெளியானது
HIGHLIGHTS

ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சிவப்பு கலரில் சிறப்பு அப்டேட் உடன் வெள்ளி முதல் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சிவப்பு கலரில் சிறப்பு அப்டேட் உடன் வெள்ளி முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் மேட் ரெட் நிற அலுமினியம் ஃபினிஷ், 64 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் ஐபோன் 8 ரெட் எடிஷன் 64 ஜிபி விலை ரூ.67,940 என்றும் 128 ஜிபி விலை Rs .81,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் 64 ஜிபி விலை Rs 77,560, 256 ஜிபி விலை Rs .91,110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக சர்வதேச சந்தையில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ரெட் எடிஷன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, ப்ரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரெட் எடிஷன் முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நாடுகளில் ஐபோன் 8 சீரிஸ் ரெட் எடிஷன் ஏப்ரல் 13-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது.

ஆப்ரிக்காவில் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆப்பிள் சாதனங்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்படுகிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு ஆலோசனை குழுவுடன் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

ஐபோன்கள் மட்டுமின்றி ஐபாட் மற்றும் ஐபேட் உள்ளிட்ட சாதனங்களின் சிவப்பு நிற எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo