6000Mah பவர் கொண்ட Infinix Smart 4 Plus ரூ. 7999 யில் அறிமுகம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

Infinix புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம்

இந்தியாவில் இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 28 ஆம் தேதி துவங்குகிறது.

 Infinix  நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் HD பிளஸ் 20.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. 

விலை  மற்றும் விற்பனை

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் வேவ் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28 ஆம் தேதி துவங்குகிறது.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் சிறப்பம்சங்கள்

– 6.82 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி+ 20.5:9  2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் 
– IMG பவர் விஆர் GE8320 ஜிபியு
– 3ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.2
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ், டெப்த் சென்சார்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிடிஎஸ்-ஹெச்டி சரவுண்ட் சவுண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
– மைக்ரோ யுஎஸ்பி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் ஜெம்-கட் டெக்ஸ்ச்சர் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :