Infinix Note Edge 5G launched in India with dimensity 7100 chip and 6500mah battery
இன்று Infinix அதன் Infinix Note Edge 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் இந்த போனில் 6,500mAh பேட்டரியுடன் மற்றும் இதில் 3D கர்வ்ட் டிஸ்ப்ளே மற்றும் XOS 16. இந்த போன் இ-சிம் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போன் ஸ்லிம்மஸ்ட் கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை பத்தி பார்க்கலாம் வாங்க.
Infinix Note Edge 5G போனின் 6GB/128GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,21,999 ஆகும் அதுவே அதன் 8GB/128GB மற்றும் 8GB/256GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,23,999 மற்றும் ரூ, 25,999 ஆகும் மேலும் இந்த போனின் விற்பனை பிப்ரவரி 25 அன்று பிளிப்கார்ட் மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட்டிலிருந்து வாங்கலாம்.
அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கார்டுகளைப் பயன்படுத்தி கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது EMI பரிவர்த்தனைகளில் ரூ.2,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம் அல்லது ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸைத் தேர்வுசெய்யலாம், இதன் மூலம் தொடக்க விலை ரூ.19,999 ஆகக் குறைகிறது.
இதையும் படிங்க 5,000mAh பேட்டரியுடன் Lava யின் புதிய போன் ரூ,7,499 யில் அறிமுகம்
Infinix Note Edge 5G போன் 6.78-இன்ச் முழு HD+ 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதனுடன் இதில் 4,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் TUV Blue Light சர்டிபிகேஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.
இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 256 ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் AnTuTu இல் 7,50,000 புள்ளிகளைப் பெற முடிந்தது, மேலும் 90fps கேம்ப்ளேவை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. சாப்ட்வேர் முன்னணியில், இது XOS 16 உடன் Android 16 யில் இயங்குகிறது, இது ஒளி மற்றும் நிழலை ஐகான்கள் மற்றும் நிலைப் பட்டியில் ஒருங்கிணைக்கும் ஒரு வடிவமைப்பு மொழியான Glow Space ஐ அறிமுகப்படுத்துகிறது. இது 3 OS மேம்படுத்தல்கள், 5 வருட பாதுகாப்பு கனெக்ஷன் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
இதனுடன் இந்த போனில் 50MP டுயல் பின் கேமரா மற்றும் செல்பிக்கு 13MP முன் கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் 6,500mAh பேட்டரியுடன் 45 W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனை tellar Blue, Silk Green, மற்றும் Lunar Titanium.போன்ற கலரில் வாங்கலாம்