HUAWEI MATE X FOLDABLE 5G ஸ்மார்ட்போன் இந்த வருடம் செப்டம்பர் அறிமுகமாகும்.

HUAWEI MATE X FOLDABLE 5G ஸ்மார்ட்போன்  இந்த வருடம்  செப்டம்பர்  அறிமுகமாகும்.

HUAWEI நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ல்மார்ட்போனினை இந்த ஆண்டு ஆரம்பத்தில்  அறிமுகம் செய்தது. இதன் விற்பனை தேதி குறிப்பிடப்படாமல் பின்னர் துவங்கும் என ஹூவாய் தெரிவித்தது. வெளியீடு தாமதமான நிலையில் ஹூவாய் மேட் எக்ஸ் விற்பனை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய ஸ்மார்ட்போன் 5ஜி சேவை கிடைக்கும் சந்தைகளில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் மேற்கத்திய பகுதிகளுக்கான தலைவர் வின்சென்ட் பேங் I MATE X மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத துவக்கத்திலோ அல்லது இறுதியிலோ அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறார். 

சிறப்பம்சங்களை பொருத்தவரை மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் (2480×1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480×2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480×892 பிக்சல்) டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கப்பட்டுள்ளது. பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் கொண்டிருக்கும் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.

ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile