HONOR 20 மொபைல் போனின் விலை குறைவிக்கப்பட்டுள்ளது.

HONOR 20  மொபைல்  போனின் விலை குறைவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் விலையயை குறுகிய காலத்திற்கு குறைத்துள்ளது.

ஹானர் 20ஐ 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 10,999 விலையில் விற்பனை

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் விலையயை குறுகிய காலத்திற்கு குறைத்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. என ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகமான ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

தற்சமயம் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் மிட்நைட் பிளாக் வேரியண்ட் விலை குறுகிய காலக்கட்டத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹானர் 20ஐ 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு நவம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI 9.0, 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் மற்ற வேரியண்ட்கள் (ஃபேண்டம் புளூ மற்றும் கிரேடியன்ட் ரெட்) விலை குறைக்கப்படவில்லை. இதனால் மிட்நைட் பிளாக் வேரியண்ட் புதிய விலை ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளத்தில் மாற்றப்பட்டுள்ளது.

3டி லித்தோகிராஃபி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனில் 3400 Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo