அறிமுகத்திற்க்கு முன்னே கிசு கிசு Google Pixel 11 Pro Fold, பற்றியா புது டீசர் ரிலிஸ் டிசைன் மற்றும் பல விவரம் லீக்

HIGHLIGHTS

Google அதன் Pixel 11 Pro Fold, போனை(Made by Google event) நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது

இந்த நிகழ்வானது நியூ யார்க் நகரத்தில் நடைபெறும்,

இப்பொழுது ந்த போனின் டிசைன் அதிகாரபூர்வமாக டீசர் வெளியிட்டுள்ளது

அறிமுகத்திற்க்கு முன்னே கிசு கிசு Google Pixel 11 Pro Fold, பற்றியா புது டீசர் ரிலிஸ் டிசைன் மற்றும் பல விவரம் லீக்

Google அதன் Pixel 11 Pro Fold, போனை மேட் பை கூகுல் (Made by Google event) நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வானது நியூ யார்க் நகரத்தில் நடைபெறும், இப்பொழுது ந்த போனின் டிசைன் அதிகாரபூர்வமாக டீசர் வெளியிட்டுள்ளது இதன் பாடி மற்றும் கேமரா மாட்யூல் முன்பை விட அதிக ரெப்ரஷாக உருவாக்கியுள்ளது, இதன் மூலம் போனை பார்க்கும் பொது ப்ரீமியம் லுக்கில் தெரிகிறது, இதன் மூலம் இந்த போனை ப்ரீமியம் பிரிவில் கொண்டு வரப்படும்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Pixel 11 Pro Fold, முன்பை விட மெலிதாக மற்றும் சிறந்த டிசைன் இருக்கும் .

டீசர் படங்களின்படி, பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் முன்பை விட மெலிதான தோற்றத்தைக் கொண்டிருக்கும். அதன் கீல் அமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது ஃபோனை மேலும் உறுதியானதாக மாற்றுவதோடு, மென்மையான மடிப்பு அனுபவத்தையும் வழங்குகிறது. பெரிய கேமரா மாட்யூல் பின்புறத்தில் அப்படியே இருக்கும், ஆனால் அதன் டிசைன் சற்றே மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

Tensor G6 சிப் மற்றும் AI சம்சம் இருக்கலாம்.

அறிக்கையின் படி Pixel 11 Pro Fold போனில் கூகுள் யின் புதிய Tensor G6 ப்ரோசெசர் கிடைக்கும், இந்த சிப் AI பர்போமான்ஸ் உடன் அதி வேகமாக இயங்கும் மற்றும் இந்த சிப், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயல்திறன், வேகமான செயலாக்கம் மற்றும் அதிக ஆற்றல் திறன் ஆகியவற்றை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஆண்ட்ராய்டு 17-ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய பிக்சல் அனுபவத்துடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இதில் பல புதிய ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அம்சங்கள் இடம்பெறக்கூடும்.

இதையும் படிங்க மார்க்கெட்டில் புதிய போனை அறிமுகம் செய்த POCO இதன் டாப் அம்சங்கள் பாருங்க

கேமராவில் இருக்கும் முன்னேற்றம்.

கூகிளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அவற்றின் கேமரா தரத்திற்காகப் பெயர் பெற்றவை. பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டின் கேமரா அமைப்பிலும் ஒரு மேம்பாடு எதிர்பார்க்கப்படுகிறது. படச் செயலாக்கம், குறைந்த ஒளிப் புகைப்படம் எடுத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புகைப்பட எடிட்டிங் அம்சங்களை அந்நிறுவனம் மேம்படுத்தக்கூடும் என்று கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ கேமரா சென்சார் விவரங்கள் வெளியீட்டு விழாவில் மட்டுமே வெளியிடப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile