Pixel 7 Series இந்தியாவில் அறிமுகம் இதன் விலை தகவல் தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

கூகுள் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான பிக்சல் 7 சீரிஸை அக்டோபர் 6 ஆம் தேதி இந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிக்சல் 7 சீரிஸுடன் பிக்சல் வாட்ச் மற்றும் பிக்சல் டேப்லெட்டையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது

பிக்சல் 7 6.3 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பிக்சல் 7 ப்ரோ 6.7 இன்ச் டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது.

Pixel 7 Series இந்தியாவில் அறிமுகம் இதன் விலை தகவல் தெரிஞ்சிக்கோங்க.

கூகுள் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான பிக்சல் 7 சீரிஸை அக்டோபர் 6 ஆம் தேதி  இந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரின் கீழ் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிக்சல் 7 சீரிஸுடன் பிக்சல் வாட்ச் மற்றும் பிக்சல் டேப்லெட்டையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. மேட் பை கூகுள் நிகழ்வில் நியூயார்க்கில் இருந்து இந்த தயாரிப்புகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டென்சர் T2 செயலி பொருத்தப்பட்டுள்ளது. பிக்சல் 7 6.3 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பிக்சல் 7 ப்ரோ 6.7 இன்ச் டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Pixel 7 Series யின் விலை தகவல்.

கூகுள் பிக்சல் 7 இன் ஆரம்ப விலை ரூ.59,999 மற்றும் பிக்சல் 7 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.84,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. Google Pixel 7 ஆனது Snow, Obsidian மற்றும் Lemongrass வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிக்சல் 7 ப்ரோ ஹேசல், அப்சிடியன் மற்றும் ஸ்னோ வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அக்டோபர் 13 முதல் பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம். சிறப்பு சலுகைகளாக பிக்சல் 7 இல் ரூ.6,000 மற்றும் பிக்சல் 7 ப்ரோவில் ரூ.8,500 கேஷ்பேக் வழங்க உள்ளது.

Pixel 7 Series சிறப்பம்சம்.

பிக்சல் 7 மாடலில் 6.32 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், சிறிய பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் குவாட் HD+ OLED டிஸ்ப்ளே, 10-120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 7 ப்ரோ மாடலில் மட்டும் ஆட்டோபோக்கஸ் அல்ட்ராவைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 48MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் டென்சார் ஜி2 பிராசஸர், 5ஜி சப்போர்ட், டைட்டன் எம்2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 6 சீரிஸ் மாடல்களை போன்றே புதிய ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கின்றன. புது பிக்சல் போன்களுக்கு மூன்று ஆண்டுகள் ஒஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும்.

கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் 4335 எம்ஏஹெச் பேட்டரியும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile