சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஜியோனி தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Gionee Max Pro இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே ஒரு வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இதன் விலை ரூ .6,999. ஸ்மார்ட்போன் கருப்பு, சிவப்பு மற்றும் ராயல் ப்ளூ என மூன்று வண்ணங்களில் வருகிறது. ஸ்மார்ட்போனின் முதல் செல் மார்ச் 8 அன்று வைக்கப்பட்டுள்ளது.
GIONEE MAX PRO சிறப்பம்சம்
புதிய ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1520 பிக்சல் டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது கேமரா, பொக்கே லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் ஜியோனி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.2, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பிரத்யகே கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்,பேஸ் அன்லாக் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கிறது.