உங்க பழைய போனை நல்ல விலைக்கு விக்கணும்னா Flipkart வாங்க.

HIGHLIGHTS

பிளிப்கார்ட் Sell Back Program திட்டத்தை அறிமுகப்படுத்தியது

பழைய மொபைல்களுக்கு நல்ல விலை

புதிய மொபைல் வாங்க கூடுதல் சலுகைகள்

உங்க பழைய போனை நல்ல விலைக்கு விக்கணும்னா  Flipkart வாங்க.

நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை விற்க விரும்பினால், அதை விற்று நல்ல சலுகையைப் பெறுவதற்கான தளத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Flipkart இன் புதிய சேவை உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும். Flipkart இன்று (பிப்ரவரி ) முதல் பயனர்களுக்காக 'Sell Back Program' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த திட்டத்தின் கீழ் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை Flipkart இல் நல்ல விலையில் விற்கலாம். பிளிப்கார்ட் பழைய போனுக்கு ஈடாக மின்னணு பரிசு கூப்பனை அதிரடி சலுகைகளுடன் உங்களுக்கு வழங்குகிறது. முக்கியமாக, நீங்கள் பிளிப்கார்ட் தளத்தில் இருந்து வாங்காத போன்களைக் கூட செல்பேக் திட்டத்தின் கீழ் அந்த நல்ல விலைக்கு விற்க முடியும்.

இந்த திட்டத்தில் நீங்கள் பலன் அடைய சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. பழைய மொபைல்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல விலை கிடைக்கிறது. மேலும், இதில் கிடைக்கும் கேஷ் கூப்பனைக் கொண்டு பிளிப்கார்ட்டில் பொருள்கள் வாங்கும் போது கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் நிறுவனம், நாடு முழுவதும் 1700 பின்கோடுகளில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சென்னை, மதுரை, திருச்சி போன்ற பல நகரங்களும் அடங்கும். சமீபத்தில் பழைய மின்னணு பொருள்களை வாங்கி விற்கும் Yaantra எனும் தளத்தை பிளிப்கார்ட் வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பிளிப்கார்ட் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

  1. முதலில் Flipkart செயலியைத் திறக்கவும்
  2. கீழே மையத்தில் உள்ள மெனுவை கிளிக் செய்யவும்
  3. அதில் ‘Sell Back’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்
  4. தொடர்ந்து கேட்கப்படும் மூன்று எளிய கேள்விகளுக்குப் பதிலளித்து உங்கள் பழைய மொபைலின் விலையைக் கண்டறியவும்
  5. விலை சரியாக இருக்கும்போது அதை உறுதிப்படுத்தவும்
  6. உறுதிப்படுத்திய 48 மணி நேரத்திற்குள், Flipkart நிர்வாகி உங்கள் வீடு அல்லது முகவரிக்கு வந்து போனை சேகரித்துக் கொள்வார்
  7. பிளிப்கார்ட் கூப்பன் போன் சரிபார்த்த சில மணிநேரங்களில் உங்களுக்கு வழங்கப்படும

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile