ஸ்மார்ட்பபோன் இந்த மாதுரி இருந்த எப்படி இருக்கும் உங்களுக்கு பிடிக்குமா இந்த டிசைன் ?

ஸ்மார்ட்பபோன்  இந்த மாதுரி இருந்த எப்படி இருக்கும் உங்களுக்கு பிடிக்குமா இந்த டிசைன் ?

2015 ஆம் ஆண்டில், ஆண்ட்ராய்டு இணை நிறுவனர் ஆண்டி ரூபின் Essential என்ற ஸ்மார்ட்போன் நிறுவனத்தைத் தொடங்கினார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிறுவனம் தனது முதல் போனை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, ரசிகர்கள் அதன் அடுத்த போனுக்காக காத்திருக்கத் தொடங்கினர். சமீபத்தில் ஆண்டி ப்ராஜெக்ட் ஜெம் என்ற புதிய ஸ்மார்ட்போனின் படங்களை ட்வீட் செய்துள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய அம்சம் அதன் வடிவமைப்பு. தோற்றத்தில், இந்த தொலைபேசி ஒரு சாதாரண ஸ்மார்ட்போனை பாதியாக வெட்டி பாதியாக பிரித்ததைப் போல நீங்கள் உணருவீர்கள்.

வித்தியாசமாக காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஜெம் (GEM) என அழைக்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் கூகுள் மேப்ஸ் செயலி காணப்படுகிறது. மேல்புறம் இயர்பீஸ் கிரில், போனினை சுற்றி பெசல்களும், இயர்பீஸ் கிரிலின் கீழ் நாட்ச் வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன் வடிவமைப்பை பொருத்தவரை இதில் டி9 ரக கீபோர்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் செல்ஃபி எடுக்க பன்ச் ஹோல் ரக கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

செங்குத்தாக இருக்கும் ஸ்மார்ட்போன் யூசர் இன்டர்ஃபேசின் மேல்புறம் பேட்டரி இன்டிகேட்டர், இன்டர்ஃபேசுக்கு ஏற்ற வகையில் கூகுள் மேப்ஸ் செயலி மாற்றப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் முற்றிலும் புதிய யு.ஐ. காணப்படுகிறது. இதன் கீபோர்டு அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo