ஆப்பிளின் இந்த ஐபோன்X நமது சென்னையில் தயாராகிறது.

HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 7 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 7 உற்பத்தி நடைபெறுகிறது

ஆப்பிளின்  இந்த  ஐபோன்X   நமது  சென்னையில் தயாராகிறது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 7 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 7 உற்பத்தி நடைபெறுகிறது. இதே ஆலையில், ஏற்கனவே ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. உள்ளிட்ட மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மாடலையும் இந்த ஆலையில் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்தால் விற்பனை அதிகரிக்கும் என ஆப்பிள் நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபோன் X உற்பத்தி ஜூலை 2019 இல் துவங்கலாம் என தெரிகிறது.

இந்தியாவில் ஐபோன் X மாடலை தாய்வான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடலை உற்பத்தி செய்ய சென்னை அருகே அமைந்திருக்கும் ஆலையில் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

முதற்கட்டமாக ஐபோன் X உற்பத்தி துவங்கியதும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR, ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்திய பொது தேர்தலுக்கு பின் உருவாகும் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பொருத்தே இவை எந்தளவு சாத்தியப்படும் என்பதை பார்க்க வேண்டும். 

இதுவரை விஸ்ட்ரண் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 29 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்ததாக இந்திய டெல்லுலார் மற்றும் மின்னணு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனம்  5.8 கோடி யூனிட்களை உற்பத்தி செய்திருந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile