Iphone S3E தகவல் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.3 பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன

ஐபோன் எஸ்.இ.3 மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது

ஐபோன் எஸ்.இ. 3 தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.3 பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் இந்த மாடலின் கான்செப்ட் ரென்டர்கள் வெளியாகின. அதில் புதிய ஐபோன் முந்தைய எஸ்.இ. மாடலில் இருந்த சேசிஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
 
 ஐபோன் எஸ்.இ.  

இத்துடன் ஐபோன் எஸ்.இ.3 மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்படலாம். மற்ற அம்சங்களை பொருத்தவரை 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐடி சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

ஐபோன் எஸ்.இ. 3 தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் வெளியீட்டு விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :