அதிவேக ப்ரோசெசருடன் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகம்.

HIGHLIGHTS

ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் டெலிபோட்டோ கேமரா, அல்ட்ரா வைடு மற்றும் வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் நேற்று (செப்.13) இரவு நடந்த 'கலிபோர்னியா ஸ்ட்ரீமிங்' மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வின் வழியாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 13 ப்ரோ மாடலில் புகைப்படங்களை அதிகளவு கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களாக வெண்ணிலா ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் நேற்று (செப்.13) இரவு நடந்த 'கலிபோர்னியா ஸ்ட்ரீமிங்' மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வின் வழியாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் டெலிபோட்டோ கேமரா, அல்ட்ரா வைடு மற்றும் வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் உள்ள அனைத்து கேமராக்களிலும் நைட் மோட் அம்சம் உள்ளது. இத்துடன் பிரத்யேக மேக்ரோ மோட் வழங்கப்பட்டு உள்ளது.

ஐபோன் 13 ப்ரோ மாடலில் புகைப்படங்களை அதிகளவு கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ப்ரோ தர கேமரா சிஸ்டம் இதுவரை இல்லாத அளவு சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க வழி செய்கிறது.

ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் அம்சங்கள்:

சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். ப்ரோ மோஷன், ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே பேனல் கொண்டிருக்கும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது. புதிய ஐபோன் 13 ப்ரோ மாடல் 6.1 இன்ச் அளவிலும் 13 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் அளவிலும் கிடைக்கிறது.

பல்வேறு அசத்தல் அப்டேட்களை கொண்டிருக்கும் ஐபோன் 13 ப்ரோ முந்தைய மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் முந்தைய ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலை விட 2.5 மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

ஐபோன் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை முறையே 999 டாலர்கள் மற்றும் 1099 டாலர்கள் என துவங்குகிறது. புதிய ப்ரோ மாடல்களின் மெமரி 128 ஜிபியில் துவங்கி அதிகபட்சம் 1 டிபி வரை கிடைக்கிறது.  

ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே ஏ15 பயோனிக் சிப்செட் மற்றும் ஐஓஎஸ் 15 ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு அதிக ஸ்க்ரீன் ரியல் எஸ்டேட்டை வழங்குவதற்காக இந்த போன்களில் உள்ள நாட்ச் வடிவமைப்பு இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து சிறிது "குறைக்கப்பட்டுள்ளது".

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :