ஐபோன் 12 ப்ரோ தகவல் இன்டெர்ட்டில் லீக், ரேம் எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க

HIGHLIGHTS

ஐபோன் 12 ப்ரோ  தகவல் இன்டெர்ட்டில் லீக், ரேம்  எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன்கள் வெளியாகி சில மாதங்கள் நிறைவுற்று இருக்கும் நிலையில், 2020 ஐபோன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய விவரங்களின் படி 2020 ஆண்டில் வெளியாக இருக்கும் ஐபோன் 12 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலிலும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 மாடலில் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம்.

ஃபிளாக்‌ஷிப் மாடல்களை தவிர ஆப்பிள் நிறுவனம் சற்றே குறைந்த விலையில், ஐபோன் எஸ்.இ. 2 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக குவால்காம் வெளியிட்ட தகவல்களிலும் 2020 ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இத்துடன் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பின்புறம் 3D சென்சிங் வசதி மற்றும் அதிவேக 5ஜி செயல்திறன் வழங்கும் எம்.எம். வேவ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile