புதிய ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்ட IPAD Air மாடல் அறிமுகம்

Updated on 17-Sep-2020
HIGHLIGHTS

புதிய ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபேட் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது

புதிய ஐபேட் ஏர் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆல் ஸ்கிரீன் டிசைன், யுஎஸ்பி டைப் சி வசதி கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்ட ஐபேட் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. 14 பயோனிக் பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை சீராக இயக்கும் திறன் கொண்டது
 
புதிய ஐபேட் ஏர் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆல் ஸ்கிரீன் டிசைன், யுஎஸ்பி டைப் சி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில், மேஜிக் கீபோர்டு சாதனங்களுடன் இயக்கும் வசதி கொண்டுள்ளது. இது ஐபேட் ஒஎஸ்14 இயங்குதளம் கொண்டுள்ளது.

இதன் முன்புறம் 7 எம்பி ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் புதிய ஐபேட் ஏர் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக துல்லியமாக எடுக்க முடியும். இதன் டாப் பட்டனில் டச் ஐடி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஆப்பிள் புதிய ஐபேட் ஏர் மாடல் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபேட் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஐபேட் ஏர் விலை 599 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44088 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :