Apple கொண்டு வந்துள்ளது iOS 14உயில்,புதிய ஹோம் ஸ்க்ரீன்.

HIGHLIGHTS

புதிய IOS14 ஆப்பிள் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

iOS 14 இத்துடன் மேம்படுத்தப்பட்ட சிரி ஸ்க்ரீன் முழுவதையும் ஆக்கிரமிக்காத வகையில் மாற்றப்பட்டுள்ளது.

iOS 14 அப்டேட்டில் பிக்ச்சர் இன் பிக்ச்சர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய IOS14 ஆப்பிள் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயங்குதளத்தின் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு புதிய ஆப் லைப்ரரி மற்றும் புது வடிவமைப்பு கொண்ட விட்ஜெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

iOS 14 இத்துடன் மேம்படுத்தப்பட்ட சிரி ஸ்க்ரீன் முழுவதையும் ஆக்கிரமிக்காத வகையில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த இயங்குதளத்தில் மொழிபெயர்ப்பு சேவையை வழங்கும் டிரான்ஸ்லேட் ஆப் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரான்ஸ்லேட் சேவைக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

iOS 14 அப்டேட்டில் பிக்ச்சர் இன் பிக்ச்சர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதை கொண்டு வீடியோக்களை திரையில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும். இதே அம்சம் ஆண்ட்ராய்டில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் மேப்ஸ் சேவையில் சைக்ளிங் வசதியும், இவி எனும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இவி அம்சமானது எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணிப்போர், வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும் இடங்கள் அடங்கிய வழியை காண்பிக்கிறது. மேலும் ஆப்பிள் கார்பிளே இன்டர்ஃபேஸ் அளவில் மாற்றம் செய்யப்பட்டு, சில புதிய வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :