Apple Event 2021 அதிகாரபூர்வமாக iPhone 13 Series வெளியிட்டு அறிவிப்பு.

HIGHLIGHTS

ஐபோன் 13 சீரிஸ், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம்

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் ஐபோன் 13 சீரிஸ், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் ஸ்கிரீன், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் ஸ்கிரீன், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மேம்பட்ட 7பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படலாம்.

புதிய ஐபோன்களில் அதிவேக 5ஜி சேவை வழங்கும் ஏ15 சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ப்ரோ-மோஷன் டிஸ்ப்ளே, சிறப்பான வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்கள் 41 எம்.எம். மற்றும் 45 எம்.எம். அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் எஸ்7 சிப் வழங்கப்படலாம்.

செயற்கைக்கோள் தொடர்பை ஆதரிக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ் 60 பேஸ்பேண்ட் சிப் புதிய ஐபோனில் வர வாய்ப்புள்ளது. அறிக்கையின்படி, பயனர்கள் இதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், டெலிகாம் ஆபரேட்டர்கள் குளோபல் ஸ்டார் உடன் இணைந்து இதற்கு சில தயாரிப்புகளைச் செய்ய வேண்டும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :