Samsung Galaxy M32 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூபாயில், 20999 விலையில் அறிமுகம்.
Samsung Galaxy M32 5G குறைந்த விலை 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது
மீடியாடெக்கின் ஆக்டா கோர் ப்ரோசெசர் சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி யில் கொடுக்கப்பட்டுள்ளது
கூடுதல் சுவாரசியமாக, மீடியாடெக் டைமென்சிட்டி 720 சிப்செட் மூலம் இந்தியாவில் இயங்கும்
சாம்சங் இந்திய சந்தையில் மற்றொரு குறைந்த விலை 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இந்த போன் சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி ஆகும். மீடியாடெக்கின் ஆக்டா கோர் ப்ரோசெசர் சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி யில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போன் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம் 32 இன் 5 ஜி பதிப்பாகும். போனில் நாட்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, இது ஒரு மெல்லிய பெசெல்ஸ்கொண்டது. கேலக்ஸி எம் 32 ஆனது 12 5 ஜி பேண்டுகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் இந்த போனில் நல்ல 5 ஜி வேகத்தைப் பெறுவீர்கள், இருப்பினும் இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க் வணிகரீதியாக தொடங்கப்படவில்லை.
Surveyவடிவமைப்பை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் செல்பீ ஸ்னாப்பருக்கான வாட்டர் டிராப் நாட்ச், பின்புறத்தில் குவாட் கேமராக்கள் மற்றும் செக்யூரிட்டிக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவைகள் உள்ளது.
முக்கியமான அம்சங்களாக சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி ஸ்மார்ட்போனின் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 48 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்றவைகளை கூறலாம்.
கூடுதல் சுவாரசியமாக, மீடியாடெக் டைமென்சிட்டி 720 சிப்செட் மூலம் இந்தியாவில் இயங்கும் முதல் போனும் இதுவே ஆகும்.
இந்தியாவில் Samsung Galaxy M32 5G விலை, விற்பனை மற்றும் சலுகைகள்:
சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.20,999 ஆகும், இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜின் விலை ஆகும்
இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை அமேசான் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக செப்டம்பர் 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும்.
அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, கேலக்ஸி எம் 32 5ஜி மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ மூலம் ரூ.2,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம், ஆக ஒருவரால் இந்த லேட்டஸ்ட் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.18,999 க்கு வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி M32 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அளவிலான டிஎஃப்டி இன்ஃபினிட்டி-வி எச்டி+ டிஸ்ப்ளேவை, 1600 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 48 எம்பி (எஃப்/1.8) முதன்மை கேமரா, 8 எம்பி (எஃப்/2.2) அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி (எஃப்/ 2.4) டெப்த் கேமரா, மற்றும் 2MP (f/2.4) மேக்ரோ லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் 13MP (f/2.2) ஸ்னாப்பர் உள்ளது.
இது மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர் உடனாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது,இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை மேலும் விரிவாக்கும் ஆதரவையும் வழங்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
