லெனோவோ நிறுவனம் இந்தியாவில் டேப் பி11 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. புதிய டேப்லெட் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் ஆப்பிள் ஐபேட் ஏர் 2020 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக இந்த மாடல் லெனோவோ டேப் எம்10 ஹெச்டி ஜென் 2 மாடலுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
– 11.5 இன்ச் WQXGA 2560×1600 பிக்சல் OLED டிஸ்ப்ளே
– டால்பி விஷன், ஹெச்டிஆர்
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
– இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார்
– ஆப்ஷனல் கீபோர்டு கவர்
– யுனிபாடி மெட்டல் டிசைன்
சிறப்பம்சங்களை பொருத்தவரை லெனோவோ டேப் பி11 ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், ஹெச்டிஆர் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆப்ஷனல் கீபோர்டு கவர் ஒன்றும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய லெனோவோ டேப் பி11 ப்ரோ மாடல் விலை ரூ. 44,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்லேட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.