Whatsapp யில் இனி சாட் மூலம் ஷாப்பிங் செய்யலாம் ஜியோமார்ட் அறிமுகம்.

HIGHLIGHTS

ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் மெட்டா இணைந்து எண்ட்-டு-எண்ட் வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை அறிமுகம் செய்து இருக்கிறது

ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் வாங்கிக் கொள்ளலாம்

ஜியோமார்ட்-இல் கிடைக்கும் மளிகை பொருட்கள் மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் மெட்டா இணைந்து எண்ட்-டு-எண்ட் வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் வாங்கிக் கொள்ளலாம். முதல் முறையாக ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பயனர்கள் ஜியோமார்ட்-இல் கிடைக்கும் மளிகை பொருட்கள் மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

பொருட்கள் வாங்குவதோடு, பணம் செலுத்துவது என அனைத்தையும் வாட்ஸ்அப் சாட் மூலமாகவே செய்து கொள்ளலாம். சமீபத்தில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பொருட்களை நேரடியாக சாட் விண்டோவில் இருந்தபடி வாங்கிக் கொள்ளும் வசதியை வழங்கி இருந்தது. மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இடையேயான கூட்டணியின் அங்கமாக இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பல லட்சம் வியாபாரங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி கிடைக்கும். சேவை அறிமுகம் செய்து இருப்பதோடு ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கி, இதுவரை இல்லாத வகையில் சவுகரியமானதாக மாற்ற ஜியோமார்ட் முடிவு செய்துள்ளது.

ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப்-பில் ஷாப்பிங் செய்வது எப்படி?

வாட்ஸ்அப்-இல் இருந்தபடி ஜியோமார்ட்டில் ஷாப்பிங் செய்ய +917977079770 என்ற எண்ணிற்கு "Hi" என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்த பின் ஜியோமார்ட் பொருட்களை வாட்ஸ்அப்-இல் வாங்க துவங்கலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :