JBL One Series 104BT மற்றும் 104BTW டெஸ்க்டாப் ரெபரன்ஸ் மானிட்டர்கள் அறிமுகம்.

HIGHLIGHTS

JBL நிறுவனம் இந்தியாவில் ஒன் சீரிஸ் 104 பிடி டெஸ்க்டாப் ரெபரன்ஸ் மாணிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது

சக்திவாய்ந்த 60 வாட் கிளாஸ் டி பவர் ஆம்ப்ளிஃபையர் வழங்கப்பட்டுள்ளன

JBL நிறுவனம் இந்தியாவில் ஒன் சீரிஸ் 104 பிடி டெஸ்க்டாப் ரெபரன்ஸ் மாணிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. மிகமெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் ரெபரன்ஸ் மாணிட்டர்கள் தெளிவான ஆடியோவை வழங்கும். மேலும் இதனை ப்ளூடூத், ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனுள் சக்திவாய்ந்த 60 வாட் கிளாஸ் டி பவர் ஆம்ப்ளிஃபையர் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொரு ஸ்பீக்கருக்கும் 30 வாட் அளவில் தெளிவான இரைச்சலற்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இரு மாடல்களிலும் ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, முன்புறம் பேனல் இன்புட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பயனர்கள் ப்ளூடூத், ஆக்ஸ், ஆர்சிஏ மற்றும் டிஆர்எஸ் உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும். முன்புறம் பேனல் வால்யூம் கண்ட்ரோல்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் 1/4 இன்ச் பேலன்ஸ்டு, டூயல் ஆர்சிஏ, சிங்கிள் 1/8 இன்ச் இன்புட் மற்றும் ப்ளூடூத் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ப்ளூடூத் ரெபரன்ஸ் மாணிட்டர்களில் கோ-ஆக்சிக்கல் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் லோ – ஃபிரீக்வன்சி வூஃபர் மற்றும் மென்மையான டோம் ட்வீட்டர் வழங்கப்பட்டுள்ளன. இவை சரியான ஃபிரீக்வன்சியை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை ஆகும்.

ஜெபிஎல் ஒன் சீரிஸ் 104 பிடி மற்றும் 104 பிடிடபிள்யூ ரெபரன்ஸ் மாணிட்டர்களின் விலை ரூ. 11499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :