WWDC 21 யில் iOS 15 அறிமுகப்படுத்தியது. இப்பொழுது உங்களுக்கு iPhone யில் மாற்றம் இருக்கும்.
ஆப்பிள் இந்த ஆண்டுக்கான உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டை WWDC 21 இல் அறிமுகப்படுத்தியுள்ளது,
நீங்கள் பல புதிய சேவைகளையும் அம்சங்களையும் பெறுவீர்கள் என்று iOS 15 கூறுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 21) நேற்று நடைபெற்றது
ஆப்பிள் இந்த ஆண்டுக்கான உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டை WWDC 21 இல் அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஐபோன்களுக்கான அதன் இயக்க முறைமையின் புதிய பதிப்பாகும். நீங்கள் பல புதிய சேவைகளையும் அம்சங்களையும் பெறுவீர்கள் என்று iOS 15 கூறுகிறது.
Surveyஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 21) நேற்று நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வு ஆப்பிள் வளாகத்தில் ஏற்கனவே படமாக்கப்பட்டு, நேரலை செய்யப்பட்டது. அசத்தலான அறிமுக வீடியோவுடன் துவங்கிய டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அப்டேட்களை ஆப்பிள் மென்பொருள் பொறியாளர்கள் அறிவித்தனர்.
ஐஒஎஸ் 15
அதன்படி ஐஒஎஸ் 15 தளத்தில் பேஸ்டைம் சேவை பல்வேறு புது அப்டேட்களை பெற்றுள்ளது. இம்முறை பேஸ்டைம் சேவையில் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஆடியோ அனுபவம் முன்பு இருந்ததை விட மேம்பட்டு இருக்கிறது. பேஸ்டைம் செயலியில் புதிதாக போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பேஸ்டைம் அழைப்புகளை லின்க்குகளாக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது.
ஐஒஎஸ் 15
ஐஒஎஸ் 15 தளத்தில் ஆப்பிள் கீஸ் அம்சம் பல்வேறு புது கார்கள், தனியார் விடுதிகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவையை விரிவுப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆப்பிள் இணைந்துள்ளது. இதேபோன்று அடையாள சான்று மற்றும் இதர தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய கார்டுகளை ஆப்பிள் வாலெட் செயலியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இதேபோன்று புது ஐஒஎஸ் தளத்தின் மெசேஜஸ் சேவையில் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மெசேஜஸ் செயலியில் பல்வேறு வசதிகள் அடங்கிய (DND-Do Not Disturb) அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. போக்கஸ் என அழைக்கப்படும் புது அம்சம் எதுபோன்ற குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் வரவேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்ய வழி வகுக்கிறது.
இவற்றுடன் ஆப்பிள் மேப், வெதர் செயலிகளிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் மேப் சேவையில் முன்பு இருந்ததை விட அதிக நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. புது மேப் செயலியில் முகவரிகள் முற்றிலும் புது முறையில் அதிக தெளிவாக காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐஒஎஸ் 15 ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தில் அதிக அம்சங்களை வழங்குகிறது. மேலும் இது ஆடியோ அனுபவத்தை முன்பு இருந்ததை விட அதிகளவு மேம்படுத்தி இருக்கிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் சாதனத்தில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஐபேட் ஒஎஸ் 15
ஐபேட் ஒஎஸ் 15 விட்ஜெட்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விட்ஜெட்களை பொழுதுபோக்கு, விளையாட்டு என பல விதங்களில் பிரித்து அவற்றை மிக அழகாக ஒருங்கிணைத்து அடுக்கி வைத்துக் கொள்ளலாம். ஆப் லைப்ரரி அம்சத்தில் அனைத்து செயலிகளையும் விட்ஜெட் மூலம் பார்க்கலாம்.
இதன் டிரான்ஸ்லேட் அம்சம் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக வசதிகளை வழங்குகிறது. வருடாந்திர அடிப்படையில் ஆப்பிள் டிரான்ஸ்லேட் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் ஸ்விப்ட் பிளேகிரவுண்ட் தளமும் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள மல்டி டாஸ்கிங் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்த முடியும். செயலியின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அளவை திரையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் ஒவ்வொரு செயலிக்கும் ஏற்ப அசத்தலான வசதிகளை வழங்குகிறது.
இந்த தளத்தில் செயலிகளுக்கு குறியீடு எழுதும் போதே அவற்றை சோதனை செய்யும் வசதியும், அவற்றை உடனடியாக ஆப் ஸ்டோரில் பதிவேற்றம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
