HP யின் புதிய குரோம்புக் மாடலை ரூ. 25 ஆயிரம் பட்ஜெட் விலையில் விரைவில் அறிமுகம்.

HIGHLIGHTS

HP நிறுவனம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய குரோம்புக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம்

புது குரோம்புக் மாடல்களின் சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

HP யின் புதிய குரோம்புக் மாடலை  ரூ. 25 ஆயிரம் பட்ஜெட் விலையில் விரைவில் அறிமுகம்.

HP நிறுவனம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய குரோம்புக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய குரோம்புக் மாடல்களின் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை தகவல் 

இத்துடன் இன்டெல் செலரான் என்4020 பிராசஸர், இன்டகிரேட் செய்யப்பட்ட UHD iGPU கிராபிக்ஸ், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி eMMC ஸ்டோரேஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புது குரோம்புக் மாடல்களின் சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இவை 2021 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால், குறைந்த விலை குரோம்புக் மாடல்கள் நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை புது ஹெச்பி குரோம்புக் மாடலில் 14 இன்ச் ஹெச்டி 1366×768 பிக்சல், 2-செல் 45Wh பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும். கனெக்டிவிட்டிக்கு இரண்டு யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், ஒரு யுஎஸ்பி டைப் ஏ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், ப்ளூடூத் 5, வைபை வழங்கப்படலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile