மொபைலில் அடிக்கடி வரும் விளம்பர தொல்லையில் இருந்து தப்பிப்பது எப்படி?

HIGHLIGHTS

மொபைல் விளம்பரங்களை ப்லோக் செய்வது எப்படி

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வரும் விளம்பரங்களை தவிர்க்கலாம்

இந்த முறைகள் உங்களுக்கு வழிகாட்டும்.வெவ்வேறு காரணங்களுக்காக விளம்பரங்கள் காட்டப்படலாம்.

மொபைலில் அடிக்கடி வரும் விளம்பர தொல்லையில் இருந்து தப்பிப்பது எப்படி?

இன்றைய பெரும்பாலான மொபைல் போன்களில் விளம்பரங்கள் ஒரு பெரும் பிரச்னையாக இருக்குக்கிறது. பெரும்பாலும், சில அமைப்புகள் இந்த விளம்பரங்களுக்கு துணை போவதாக உள்ளன. அந்த அமைப்புகளை மாற்றினால் மட்டுமே, உங்கள் ஸ்மார்ட்போன்களை நீங்கள் நிம்மதியாகப் பயன்படுத்த முடியும். எங்கு என்ன செட்டிங்ஸை மாற்ற வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த வழிகாட்டு முறைகளில், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் விளம்பரங்களை முடக்குவதற்கான வழிமுறைகளை தொகுத்துள்ளோம். நீங்கள் குறிப்பிட்ட விளம்பரங்களை நிறுத்த விரும்பினாலும் அல்லது அவற்றை முற்றிலுமாக அகற்ற விரும்பினாலும் இந்த முறைகள் உங்களுக்கு வழிகாட்டும்.வெவ்வேறு காரணங்களுக்காக விளம்பரங்கள் காட்டப்படலாம்.

விளம்பரங்களுக்குக் காரணமான செயலிகளைக் கண்டறிந்து அவற்றிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள் இதோ:

  • உங்கள் போனின் Settings ஐ திறக்கவும்
  • ‘Apps & Notifications,’ என்பதற்குச் சென்று, 'Advanced' என்பதைத் கிளிக் செய்யவும்
  • பின்னர் ''சிறப்பு பயன்பாட்டு அணுகல்'' (Special App Access) என்பதைத் திறக்கவும்
  • ‘Display over other apps’ என்பதைத் கிளிக் செய்யவும்
  • விளம்பரங்களைக் காட்ட அனுமதி உள்ள அனைத்து செயலிகளின் பட்டியலையும் காண்பீர்கள்
  • அங்கே நீங்கள் சந்தேகிக்கும் அல்லது விளம்பரங்களை காட்டும் செயலிகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்யவும்
  • ஒரு செயலியை தேர்வு செய்து உள்நுழைந்தவுடன் “Allow display over other apps” என்பதை அணைத்து (OFF) வைக்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile