Honar பிராண்டின் புதிய பேட் 8 டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம்.
ஹானர் பிராண்டின் புதிய பேட் 8 டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது
இது ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஆகும்
இத்துடன் 5MP பிரைமரி மற்றும் செல்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹானர் பிராண்டின் புதிய பேட் 8 டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இது ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஆகும். இதில் 12 இன்ச் 2K எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 5MP பிரைமரி மற்றும் செல்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
Surveyஹானர் பேட் 8 அம்சங்கள்:
12 இன்ச் 2000×1200 பிக்சல் 2K டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
அட்ரினோ 610 GPU 4 ஜிபி / 6 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1 5MP பிரைமரி கேமரா
5MP செல்பி கேமரா 8 ஸ்பீக்கர்கள், ஹானர் ஹிஸ்டன் சவுண்ட், டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா
6.9 மில்லிமீட்டர் அளவில் மெட்டல் பாடி கொண்டிருக்கும் ஹானர் பேட் 8 மாடலில் மொத்தம் எட்டு ஸ்பீக்கர்கள், ஹானர் உருவாக்கிய ஹிஸ்டன் ஆடியோ டியுனிங், டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 7250 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹானர் பேட் 8 மாடல் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
