போனில் இனி ஸ்டோரேஜ் பிரச்சனை இருக்காது ஆண்ட்ராய்டில் வர இருக்கும் புதிய அம்சம்

HIGHLIGHTS

ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு எவ்வளவு ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் போதாமல் போய்விடும்.

ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அம்சத்தில் செயலியை அன் இன்ஸ்டால் செய்வதற்கு பதில் ஆர்கைவ்ட் ஏபிகேவாக மாற்றிகொள்ள முடியும்.

போனில் இனி ஸ்டோரேஜ் பிரச்சனை இருக்காது ஆண்ட்ராய்டில் வர இருக்கும் புதிய அம்சம்

ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு எவ்வளவு ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் போதாமல் போய்விடும்.  ஸ்டோரேஜை கிளியர் செய்வதற்கு நாம் அதிகம் பயன்படுத்தாத மொபைல் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்துகொண்டிருப்போம். மீண்டும் ஒரு கட்டத்தில் தேவைப்படும்போது அந்த செயலியை இன்ஸ்டால் செய்ய முயற்சித்தால் இடம் இருக்காது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு நாம் அதிகம் ஸ்டோரேஜ் உள்ள போன்களை வாங்க வேண்டும். ஆனால் இது எல்லோராலும் முடியாது. இந்நிலையில் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கூகுள், ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அம்சத்தில் செயலியை அன் இன்ஸ்டால் செய்வதற்கு பதில் ஆர்கைவ்ட் ஏபிகேவாக மாற்றிகொள்ள முடியும். அதன்பின் தேவைப்படும்போது செயலியை ரீஸ்டோர் செய்து மீண்டும் பழைய வடிவத்திற்கு கொண்டு வந்துவிடலாம்.

இந்த புதிய அம்சத்திற்கு ‘ஆப் ஆர்கைவிங்’ என பெயரிட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது மூலம் மொபைல் செயலியின் ஸ்டோரேஜ் 60 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நமது தனிநபர் டேட்டாக்கள் எதுவும் பாதிக்கப்படாது. 

இந்த அம்சம் இந்த வருடத்தின் பின்பகுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த புதிய அம்சம் பயனர்கள் மற்றும் டெவலப்பர்கள் இரண்டு பேருக்கும் பெரும் அளவில் பயன்படும். குறிப்பாக பயனர்கள் அதிகம் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்வதை தடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile