இனி Google Meet இலவச வீடியோ காலிங் சேவை கிடையாது Google அதிரடி.
கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்திவிட்டது
ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால், கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவை இலவசமாக வழங்கப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் சேவையான கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களை கடந்து பயன்படுத்த முடியாது.
Surveyதற்போது கூகுள் தனது இலவச சேவையை நிறுத்தி இருக்கும் நிலையில், ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது. முன்னதாக செப்டம்பர் 30, 2020 முதல் இலவச அன்லிமிட்டட் க்ரூப் காலிங் வசதியை நீக்க கூகுள் திட்டமிட்டது. எனினும், இந்த தேதியை 31 மார்ச் 2021 மற்றும் ஜூன் 30, 2021 வரை நீட்டித்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால், கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவை இலவசமாக வழங்கப்பட்டது. உலகளாவிய கூகுள் பயனர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இது பேருதவியாக இருந்தது. கூகுள் மட்டுமின்றி ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டது.
இலவச Google கணக்கு மூலம், 100 பங்கேற்பாளர்களுடன் ஒரு மணிநேரத்திற்கு ஒரு மீட்டிங் தொடங்கலாம். இருப்பினும், கூகிள் மீட்டைப் பயன்படுத்தி 24 மணிநேரம் நீங்கள் ஒருவரையொருவர் சேட் செய்யலாம் . அன்லிமிட்டட் க்ரூப் காலிங் அம்சத்தைப் பெற பயனர்கள் Google Workspace சந்தாவை வாங்க வேண்டும்.
இலவச அன்லிமிட்டட் க்ரூப் காலிங் அம்சத்திற்கு கூடுதலாக, சந்தா கஸ்டம் ஈமெயில் சேவைகள், க்ளவுட் ஸ்டோரேஜ் மற்றும் விற்பனைக்குப் பின் ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது. கூகிள் மீட்டிற்க்காக பிரீமியம் சந்தாவை நீங்கள் தனித்தனியாக வாங்க முடியாது, ஏனெனில் இது Google Workspace பண்டலில் மட்டுமே கிடைக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
