Google யின் விர்ச்சுவல் விசிட்டிங் கார்ட் அறிமுகம், இதில் என்ன சுவாரசியம்.

HIGHLIGHTS

Google சர்ச் கார்டு மூலம் பிரபலங்களின் விவரங்களை அறிந்து கொள்வது மிகவும் எளிமையான ஒன்று தான்

கூகுளின் புதிய பீப்பிள் கார்ட்ஸ் சேவையை கொண்டு பயனர்கள் அவர்களுக்கான விர்ச்சுவல் விசிட்டிங் கார்டை உருவாக்கி கொள்ள முடியும்.

Google யின்  விர்ச்சுவல் விசிட்டிங்  கார்ட்  அறிமுகம், இதில்  என்ன சுவாரசியம்.

கூகுள் சர்ச் கார்டு மூலம் பிரபலங்களின் விவரங்களை அறிந்து கொள்வது மிகவும் எளிமையான ஒன்று தான். இருப்பினும், இது பொது மக்களுக்கு பொருத்தமில்லாத ஒன்று ஆகும். இதனை முற்றிலும் மாற்ற கூகுள் பீப்பிள் கார்ட்ஸ் எனும் அம்சத்தை துவங்கி இருக்கிறது. 
 
கூகுளின் புதிய பீப்பிள் கார்ட்ஸ் சேவையை கொண்டு பயனர்கள் அவர்களுக்கான விர்ச்சுவல் விசிட்டிங் கார்டை உருவாக்கி கொள்ள முடியும். இதனை உருவாக்க பயனற்கள் சைன் இன் செய்து உங்களின் பெயர் அல்லது add me to search என சர்ச் பாக்சில் டைப் செய்ய வேண்டும். 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஒரு அக்கவுண்ட்டிற்கு ஒரு கார்டு மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவேளை கார்டு உருவாக்கியவர்கள் அதனை அழித்துவிடும் வசதியும் வழங்கப்படுகிறது. கூகுளின் பீப்பிள் கார்ட்ஸ் அம்சம் மொபைல் சர்ச் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

இனி உங்களின் விவரங்களை கூகுள் அக்கவுண்ட்டில் இருந்து உருவாக்கிக் கொள்ள கோரும் தகவல் திரையில் தோன்றும். இதில் உங்களின் விவரங்கள் மட்டுமின்றி, வலைதளங்கள் மற்றும் சமூக வலைதள ப்ரோபைல்களை லின்க் செய்து கொள்ள முடியும். பயனர் விரும்பும் பட்சத்தில் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்து கொள்ளலாம்.

கூகிளில் இது போல செய்யுங்கள் people card

உங்கள்   people card  உருவாக்க, முதலில் உங்கள் Google கணக்கில் உள்நுழைக. இதற்குப் பிறகு நீங்கள் 'தேட என்னைச் சேர்' என்று தேட வேண்டும். இதைச் செய்த பிறகு, 'உங்களை Google தேடலில் சேர்க்கவும்' என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். இந்த செய்தியைத் தட்டவும், தட்டிய பிறகு, கூகிள் உங்கள் போன் எண்ணைக் கேட்கும். உள்ளிடப்பட்ட மொபைல் எண்ணில் தோன்றும் 6 இலக்க கோட் (Digit Numbur) கொண்டு எண்ணை சரிபார்க்க வேண்டும். இதற்குப் பிறகு, கூகிள் உங்களுக்கு ஒரு படிவத்தை வழங்கும். இதில், பொது சுயவிவரத்தை உருவாக்க தேவையான தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் வேலை , படிப்பு தவிர இன்னும் பல விவரங்களை உள்ளிடுவதற்கான வசதியை இங்கே பெறுவீர்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile