Google Doodle இன்று 23 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது

HIGHLIGHTS

உலகின் மாபெரும் Google search , இன்று (செப்.27) தனது 23 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது

செப்டம்பர் 27, 1988 அன்று கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டது.

உலகம் முழுக்க சுமார் 150-க்கும் அதிக மொழிகளில் கூகுள் தேடுப்பொறி இயங்கி வருகிறது

அனைவருக்கும் பிடித்த, அதே சமயம் உலகின் மாபெரும் Google search , இன்று (செப்.27) தனது 23 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அலங்கரிக்கப்பட்ட கூகுள் வார்த்தைகள், மெழுகுவர்த்தி, கேக் மற்றும் டோநட் கொண்டு டூடுல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 23 என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. 

செப்டம்பர் 27, 1988 அன்று கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தை செர்ஜி ப்ரின் மற்றும் லேரி பேஜ் இணைந்து துவங்கினர். தற்போது உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் தேடுப்பொறியாக கூகுள் உயர்ந்து இருக்கிறது. 

'ஒவ்வொரு நாளும் கூகுள் தளத்தில் பல கோடி தேடல்கள் நடக்கின்றன. உலகம் முழுக்க சுமார் 150-க்கும் அதிக மொழிகளில் கூகுள் தேடுப்பொறி இயங்கி வருகிறது. லெகோ பிளாக்குகளால் உருவாக்கப்பட்ட சர்வரில் துவங்கி தற்போது உலகம் முழுக்க சுமார் 20-க்கும் அதிக டேட்டா செண்டர்களை கூகுள் கொண்டிருக்கிறது.' 

'உலக விவரங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கூகுளின் நோக்கம் இன்றுவரை மாற்றப்படவே இல்லை,' என கூகுள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :