கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு 2020 யில் எவ்வளவு சம்பளம் என்று நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

கூகுள்  CEO  சுந்தர் பிச்சைக்கு  2020 யில் எவ்வளவு சம்பளம் என்று நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.
HIGHLIGHTS

சுந்தர் பிச்சை 2020 ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் பெற இருக்கிறார். இது வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது

கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். தற்போது இவர் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

 இந்த நிறுவனம் கூகுளின் தாய் நிறுவனமாகும். ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் தாங்கள் வகித்து வந்த தலைமை செயல் அதிகாரி பதவியை விட்டு விலகியதால் அதை சுந்தர்பிச்சை ஏற்றார். தற்போது அவர் ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார்.

சுந்தர் பிச்சை 2020 ஆண்டுக்கு ரூ.14 கோடி சம்பளம் பெற இருக்கிறார். இது வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இத்துடன் சுமார் 1700 கோடி ரூபாயினை பங்கு தொகையாக பெற இருக்கிறார். பங்கு தொகை என்பது கூகுள் நிறுவனத்தின் பங்குகளை நிறுவன ஊழியர் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு வாங்கிக் கொள்வது ஆகும்.

மேலும் இவர் நேற்று முன்தினம் ரூ.639 கோடி (120 மில்லியன் டாலர்) பங்கு தொகை பெற்றார். இதற்கு முன்பு 2 தடவை தலா ரூ.852 கோடி (120 மில்லியன் டாலர்) மற்றும் ரூ.214 கோடி (30 மில்லியன் டாலர்) பங்கு தொகையை பெற்று இருக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் இணைந்தார். இவரது தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சுந்தர் பிச்சை சென்னையை சேர்ந்தவர். சென்னை ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படித்தவர். ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு மேற்கொண்டார். வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

சுந்தர்பிச்சை கூகுள் நிறுவனத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோமை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். இதன் மூலம் கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. அதைதொடர்ந்து தனது கடின உழைப்பால் 2015-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo