GMAIL மற்றும் GOOGLE ட்ரைவில் திடீர் முடக்கம், உலகம் முழுக்க பெரும் அவதி.

GMAIL மற்றும் GOOGLE ட்ரைவில் திடீர்  முடக்கம், உலகம் முழுக்க பெரும் அவதி.
HIGHLIGHTS

பயனர்கள் Gmail மற்றும் Google ட்ரைவில் கோப்புகளை பதிவேற்ற முடியவில்லை .

அவ்வாறு செய்ய முயற்சிக்கும்போது பயனர்கள் பிழை பெறுகிறார்கள்.

ஜி சூட் நிலை டாஷ்போர்டு இதை “சேவை சீர்குலைவு” என்று எடுத்துக்காட்டுகிறது.

இணையதள உலகில் பிரபலமான சர்ச்  இன்ஜின் கூகுள் நிறுவனத்தின் இ-மெயில் பிரிவான ஜிமெயில் நேற்று காலையில் திடீரென முடங்கியது.

இதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து கூகுள் நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மேலும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து நெட்டிசன்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கவலைகளை பகிர்ந்தனர். இது சர்வதேச அளவில் வைரலானது.

இதனால் இ-மெயிலை லாக்-இன் செய்யவோ, செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. மேலும் கூகுள் மீட் செயலியில் ரிக்கார்டிங் செய்யவோ, கூகுள் டிரைவில் பைல்களை உருவாக்கவோ, கூகுள்சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அனைத்து பயனாளர்களுக்கும் இ-மெயில் சேவை திரும்ப கிடைப்பதற்காக விரைவில் தீர்வு காணப்படும் என கூகுள் நிறுவனம் நேற்று மாலையில் அறிவித்தது.

முடங்கிப்போன இ-மெயில் சேவையை மீண்டும் செயல்படுத்த கூகுள் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதனால் பல பகுதிகளில் பயனாளர்கள் இ-மெயில் சேவையை மீண்டும் பெற்றனர். எனினும் அனைத்து பகுதிகளிலும் இந்த சேவையை மீட்டெடுக்க கூகுள் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo