மக்களே உஷார் e-PAN Card டவுன்லோட் ஈமெயில் வந்தால் எச்சரிக்கை, தப்பி தவறி கூட க்ளிக் செய்யாதிங்க

மக்களே உஷார் e-PAN Card டவுன்லோட் ஈமெயில் வந்தால் எச்சரிக்கை, தப்பி தவறி கூட க்ளிக் செய்யாதிங்க

உங்களில் சில பல பேருக்கு e-PAN கார்ட் டவுன்லோட் செய்வதை கொண்டு ஈமெயில் வந்து இருக்கலாம்! உடனே பயப்பட வேண்டாம் இது மோசடி கும்பலின் நூதன முறையிலான புதிய வகை திருட்டு எச்சரிக்கை மக்களே. சமிபத்தில் இந்த சைபர் ஹேக்கர்கள் e-PAN கார்டை டவுன்லோட் செய்யுமாறு கேட்கிறார்கள், மேலும் இது முழுக்க முழுக்க போலியானது என PIBFactCheck யின் X ட்விட்டர் பக்கத்தில் இதை பற்றி போஸ்ட் ஷேர் செய்யப்பட்டுள்ளது, மேலும் அதில் இது போன்ற ஈமெயில் போலியானது என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது முழுசா பாருங்க .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பயனர்கள் தங்கள் மின்-நிரந்தர அக்கவுன்ட் நம்பர் (e-PAN) கார்டை டவுன்லோட் செய்யலாம் என்று Email கூறுகிறது. இருப்பினும், இந்த மெசேஜ் போலியானது என்றும், மக்கள் அத்தகைய ஈமெயில்களுக்கு பதிலளிக்கவோ அல்லது அவற்றில் வழங்கப்பட்ட எந்த லின்ங்க்கலையோ கிளிக் செய்யவோ கூடாது என்றும் PIB Fact Check தெளிவுபடுத்தியுள்ளது. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

e-PAN கார்ட் ஸ்கேன் என்றால் என்ன?

e-PAN கார்ட் ஸ்கேம் என்பது சைபர் குற்றவாளிகளின் நூதன முறையிலான புதிய வகை மோசடியாகும், இதில் மக்கள் e-PAN கார்ட் டவுன்லோட் செய்ய வழி வகுக்கிறது , இந்த ஈமெயில் பார்க்கும்போது ஒரிஜினலாக இன்கம் டேக்ஸ் துறையிலிருந்து அனுப்பியது போலவே இருக்கும், e-PAN கார்டைப் டவுன்லோட் செய்வதற்காக ஈமெயிலில் உள்ள லிங்க் போலியானது மற்றும் பயனரின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி அவர்களின் பேங்க் அக்கவுன்ட்களை காலி செய்யும் நோக்கம் கொண்டது.

இது போன்ற Email வந்தால் என்ன செய்ய வேண்டும்

உங்களுக்கு இது போன்ற Email வந்தால் PIBFactCheck யின் படி இது போன்ற ஈமெயிளுக்கு பதிலைக்க கூடாது, இதை தவிர தன்னை ஒரு வருமான துறை அதிகாரி என கூறு மிரட்டும் நபருக்கு எந்த ஒரு பதிலைக்காமல் மற்றும் பயப்படாமல் இருக்க வேண்டும்.

  • மேலும், ஈமெயில்களில் உள்ள எந்த லிங்க்களையும் திறக்க வேண்டாம், ஏனெனில் அவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் போன்றவற்றிக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் அல்லது மேல்வேர் இருக்கலாம்.
  • ஈமெயில்களில் உள்ள லிங்க்களைக் கிளிக் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தாலும், உங்கள் பேங்க் விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்களை உள்ளிடாதீர்கள்.
  • ஈமெயில் மெசேஜ்களிலிருந்து லிங்க்கலை உங்கள் பிரவுசரில் காப்பி செய்து பேஸ்ட் செய்ய வேண்டாம். ஹேக்கர்கள் உண்மையானதாகத் தோன்றும் லிங்க்களை உருவாக்குகிறார்கள், ஆனால் உங்களை போலி வெப்சைட்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
  • உங்கள் கம்யூட்டரில்யில் எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட வைரஸ் ப்ளாக் , ஸ்பைவேர் ரெசிஸ்டன்ட் மற்றும் ஃபயர்வால்களைப் பயன்படுத்தவும். இவை இணையத்தில் உங்களை உளவு பார்க்கக்கூடிய தேவையற்ற பைல்கள் மற்றும் சாப்ட்வேர்கலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன.

இதையும் படிங்க:Jio யின் ரூ,500 யில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் பல OTT நன்மை

இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி

உங்கள் ஈமெயிலில் e-PAN போன்ற போலியான மெசேஜ் வந்தால் நீங்கள் எளிதாக புகார் அளிக்கலா அது எப்படி பாருங்

  • சந்தேகத்திற்கிடமான ஈமெயில்கள் அல்லது ஈமெயில்களில் பெறப்பட்ட வெப்சைட் லயன்களை webmanager@incometax.gov.in என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  • மேலும் CERT-In-க்கும் தெரிவிக்கவும். ஒரு நகலை incident@cert-in.org.in என்ற முகவரிக்கு அனுப்பவும்.
  • இதற்குப் பிறகு உடனடியாக, அந்த போலி ஈமெயிலை உங்கள் இன்பாக்ஸிலிருந்து நீக்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo