ஏப்ரல் 1 முதல் PAN கார்டில் புதிய மாற்றம் இனி புது கார்டுக்கு அப்ளை அல்லது அப்டேட் செய்வோர் இதை தெருஞ்சிகொங்க
Permanent Account Number (PAN) இருந்தாலோ அல்லது புதிய நம்பர் அப்டேட்
இந்த கோடானது (Income Tax Department) வருமான துறையின் மூலம் உருவக்குப்படுவது ஆகும்.
இனி ஏப்ரல் 1 2026 லிருந்து PAN கார்டில் பல மாற்றங்கள் நடைபெற இருக்கிறது,
உங்களிடம் Permanent Account Number (PAN) இருந்தாலோ அல்லது புதிய நம்பர் பெற நினைத்தாலோ, இந்தச் செய்தி பயனுள்ளதாக இருக்கும். PAN என்பது ஒரு தனித்துவமான எழுத்து மற்றும் நம்பர் கலந்த (Alphanumeric) கோட் ஆகும். இந்த கோடானது (Income Tax Department) வருமான துறையின் மூலம் உருவக்குப்படுவது ஆகும். இப்பொழுது இதில் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் என்னவென்றால், இனி ஏப்ரல் 1 2026 லிருந்து PAN கார்டில் பல மாற்றங்கள் நடைபெற இருக்கிறது, இதன் தொடர்ந்து CSC e-Governance Services India Limited அதன் அதிகாரபூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Surveyநீங்கள் உங்களின் பேன் கார்டை அப்டேட் அல்லது புதிய PAN கார்ட் உருவாக்க விரும்பினால், பேன் கார்டில் இருக்கும் புதிய மாற்றத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்
Easy or hard? https://t.co/QSSAMuFvpk
— Income Tax Parody (@IncomeTaxParody) March 23, 2026
புதிய PAN கார்ட் விதியின் மாற்றம் என்ன
இனி, ஆதார் எண்ணை மட்டும் கொண்டு பான் எண்ணுக்கு விண்ணப்பிக்க முடியாது. உங்கள் அடையாளத்தையும் பிறந்த தேதியையும் நிரூபிக்க, நீங்கள் கூடுதல் ஆவணங்களையும் வழங்க வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க:WhatsApp யில் க்ரூப் நோட்டிபிகேஷனால் ஒரே தொல்லையா,இந்த ஒரு செட்டிங் மட்டும் பண்ணிடுங்க நிம்மதியா இருக்கலாம்
மற்றொரு முக்கியமான மாற்றம் என்னவென்றால், உங்கள் பான் அட்டை மற்றும் ஆதார் கார்டில் உள்ள பெயர் துல்லியமாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பெயர் வேறுபட்டால், உங்கள் அப்ளிகேஷன் தாமதமாகலாம்.
இதற்க்கு என்ன என்ன டாக்யுமென்ட் இப்பொழுது அவசியமாக்கப்பட்டது?
இப்பொழுது இந்த புதிய விதியின் படி கீழே உள்ள ஆதார் கார்ட் மட்டுமல்லாமல் இந்த டாக்யுமென்ட் அவசியமாகும்.
- பிறந்த சான்றிதழ் (Birth Certificate)
- வோட்டர் ஐடி கார்ட்
- பாஸ்போர்ட்
- டிரைவிங் லைசன்ஸ்
- 10 ஆம் வகுப்பு சான்றிதழ்
- நீதிபதி வழங்கிய பிரமாணப் பத்திரம்
இப்பொழுது இதை அப்ளை செய்வது எப்படி?
- முதலில் உங்கள் வெப் பிரவுசர் (குரோம் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்றவை) திறக்கவும்.
- இப்போது UTIITSL வெப்சைட்டிற்கு சென்று, PAN Card services பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் விரும்பினால், Income Tax Department அல்லது Protean வெப்சைட்டை பார்வையிடலாம்.
- இங்கே Indian citizen/NRI இந்தியர்களுக்கான பான் கார்ட் விருப்பத்தைக் காண்பீர்கள், அதைத் தேர்ந்தெடுக்கவும்.
- புதிய விதிகளின் கீழ் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான பார்மை தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது உங்கள் ஆதார் கார்டில் கொடுத்துள்ளபடியே உங்கள் விவரங்கள் அனைத்தையும் சரியாக நிரப்பவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் அடையாள அத்தாட்சி மற்றும் பிறந்த தேதி (DOB) தொடர்பான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- படிவத்தைச் சமர்ப்பிக்கும் முன், எந்தத் தவறும் ஏற்படாதவாறு அனைத்து விவரங்களையும் கவனமாகச் சரிபார்க்கவும்.
- இறுதியாகக் கட்டணத்தைச் செலுத்தி, உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile