National Technology Day 2026:Pokhran டெஸ்ட் வெற்றியை குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்துக்கள்

ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று National Technology Day கொண்டாப்படுகிறது இந்தியாவில் தினசரியாக தொழில்நுட்பத்தில் மிக பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்பது மிகவும் பெருமை ஆகும் இந்த நாளில் பிரதமர் நரேந்திர மோதி 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி, ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா வெற்றிகரமான அணு சோதனைகளை நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை இது நினைவுகூர்கிறது. மேலும் டெக்நோலாஜியில் இந்தியாவின் மிக பெரிய தூணாக இருக்கிறது என அவர் கூறினார்

1998-ஆம் ஆண்டின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், இந்தியாவின் அறிவியல் மேன்மையையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலித்தது என்று மோடி கூறினார். X-இல் பதிவிட்ட ஒரு பதிவில் மோடி, “தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துக்கள். 1998-யில் பொக்ரானில் வெற்றிகரமான சோதனைகளுக்கு வழிவகுத்த நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நாம் பெருமையுடன் நினைவு கூர்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் தொழில்நுட்பம் ஒவ்வொரு செக்டரில் மிக பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாகவும் மற்றும் AI தொழிநுட்பத்திலும் மிக பெரிய
மாற்றங்களுடன் மக்கள் எளிதாக பயன்படும் வகையில் கொண்டுவரப்படுகிறது, இது வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது மற்றும் அனைத்துத் துறைகளிலும் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது.

1998-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி, ராஜஸ்தானில் உள்ள போக்ரான் சோதனைத் தளத்தில் இந்தியா தொடர்ச்சியான நிலத்தடி அணு சோதனைகளை நடத்தியபோது வரலாறு மீண்டும் எழுதப்பட்டது. ‘ஆபரேஷன் சக்தி’ என்ற குறியீட்டுப் பெயரில், இந்தச் சோதனைகள் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் துணிச்சலான நடவடிக்கை, இந்தியாவின் வியூகத் தெளிவையும் அறிவியல் ஆற்றலையும் உலகிற்கு வெளிப்படுத்தியது. சுவாரஸ்யமாக, ஒடிசா மாநிலம் இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்துடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. ஏனெனில், போக்ரான் காலத்தின் உத்வேகத்தைத் தொடர்ந்து வந்த பல வரலாற்று சிறப்புமிக்க ஏவுகணைத் திட்டங்களுக்கு, சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட்டிங் தளம் ஏவுதளமாக இருந்துள்ளது.

இந்த ஆண்டு அரசு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் AI யின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் என என கூறினார் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் குறைக்கடத்திகள் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகியவை நகர்ப்புற மையங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கின்றன. 1998-ஆம் ஆண்டின் மைல்கற்கள் வியூகப் பாதுகாப்பைப் பற்றியதாக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டின் தொலைநோக்குப் பார்வையானது, தொழில்நுட்பம் பொருளாதார இறையாண்மையையும் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்துச் செல்லும் ‘விக்ஷித் பாரத் @ 2047’-ஐ நோக்கியுள்ளது.

இதையும் படிங்க உரெல்லாம் ஒரே பேச்சு தளபதி CM Vijay செல்ஃபி எடுத்த போன் எது? அது iphone யின் எந்த மாடல்

சாப்ட்வேர் டெக்னாலஜி யில் வளர்ச்சி

சாப்ட்வேர் சேவையில் சூப்பர் சைக்கிள் ட்ரேன்ஸ்பர்மேஷன் கீழ் பேசிக் சாப்ட்வேர் சேவையிலிருந்து குவாண்டம் கம்யுட்டிங் மற்றும் மிக சிறந்த அப்டேட் எனர்ஜி சல்யுஷன் உடன் சைன்ஸ் மற்றும் டெக்னாலஜி யில் வளர்ச்சியை கொண்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து, குறைந்த விலையில் மற்றும் விரிவாக்கக்கூடிய கண்டுபிடிப்புகள் மூலம் நிஜ உலக இந்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புத்தொழில் நிறுவனங்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. இந்த நாள், இளைஞர்கள் STEM துறைகளில் தொழில் வாழ்க்கையைத் தொடரவும், நாட்டின் வளர்ந்து வரும் உலகளாவிய பங்களிப்பிற்கு உதவவும் ஒரு உத்வேகமாகத் திகழ்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :