இந்தியாவில் IOS 14 மற்றும் Ipad OS 14 வெளியிடப்பட்டு இருக்கிறது

இந்தியாவில் IOS 14 மற்றும் Ipad OS 14 வெளியிடப்பட்டு இருக்கிறது
HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐஒஎஸ் 14 மற்றும் ஐபேட் ஒஎஸ் 14 இயங்குதளங்களை வெளியிடுகிறது

பீட்டா வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எஸ்இ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களுக்கு புது அப்டேட் 3.36 ஜிபி அளவு கொண்டுள்ளது

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐஒஎஸ் 14 மற்றும் ஐபேட் ஒஎஸ் 14 இயங்குதளங்களை வெளியிடுகிறது. முன்னதாக ஐஒஎஸ் 14 அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை பீட்டா வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய அப்டேட் ஏற்கனவே டவுன்லோட் ஆகி, பயனர்களை இன்ஸ்டால் செய்ய கோருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு இன்ஸ்டால் ஆகதவர்கள் தங்களது சாதனத்தின் செட்டிங்ஸ் பகுதியில் சாப்ட்வேர் அப்டேட் பகுதிக்கு சென்று புதிய இயங்குதளத்தை டவுன்லோட் செய்யலாம்.

புதிய ஐஒஎஸ் 14 அப்டேட் ஐபோன் 6எஸ் சீரிஸ், ஐபோன் 7 சீரிஸ், ஐபோன் 8 சீரிஸ், ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்எஸ் சீரிஸ், ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் எஸ்இ (1&2 மாடல்கள்) உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படுகிறது. 

ஐபோன் எஸ்இ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களுக்கு புது அப்டேட் 3.36 ஜிபி அளவு கொண்டுள்ளது. ஐஒஎஸ் 14 வெர்ஷனை டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்த பின் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் பலவிதங்களில் மாற்றப்பட்டு இருப்பதை கவனிக்க முடியும்.

இதேபோன்று ஐபேட் ஒஎஸ் 14 ஐபேட் ஏர் 2 மற்றும் புதிய ஐபேட் ஏர், ஐபேட் மினி 4, ஐபேட் மினி 5, ஐபேட் 5th ஜென், ஐபேட் ப்ரோ மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo