புதிய ஈமோஜி Deep Fusion அம்சம் கொண்ட IOS . 13.2, ஐபேட் OS .13.2 இயங்குதளங்களை வெளியிட்டுள்ளது

புதிய ஈமோஜி Deep  Fusion அம்சம் கொண்ட   IOS . 13.2, ஐபேட் OS .13.2 இயங்குதளங்களை வெளியிட்டுள்ளது
HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் IOS . 13 இயங்குதளத்தை கடந்த மாதம் வெளியிட்டது. பின் சில வாரங்களுக்கு பின் 13.13 அப்டேட் வெளியிடப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் IOS . 13 இயங்குதளத்தை கடந்த மாதம் வெளியிட்டது. பின் சில வாரங்களுக்கு பின் 13.13 அப்டேட் வெளியிடப்பட்டது. 

இந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் IOS . 13.2, ஐபேட் OS . 13.2 இயங்குதளங்களை வெளியிட்டுள்ளது. இரு அப்டேட்களிலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐபோன் 11 சீரிஸ் மாடலின் டீப் ஃபியுஷன் கேமரா அம்சம் முதன்மையாக இருக்கிறது.

இவற்றில் காது கேட்க செய்யும் கருவியுடன் இருக்கும் நபர், சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நபர் என பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த அம்சம் ஏ13 நியூரல் என்ஜின் பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை அதிக தரத்தில் வழங்கும். இந்த அப்டேட் புதிய எமோஜிக்களை வழங்குகிறது. இவை ஆப்பிள் அனுமதித்த யுனிகோட் 12.0 தளம் சார்ந்து இயங்குகிறது. 

புதிய அம்சங்கள் தவிர ஐபோன் மற்றும் ஐபேட் இயங்குதளங்களில் இருந்த பிழை சரி செய்யப்பட்டு, அவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர மக்கள் கைகோர்த்து இருக்கும் எமோஜி பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சிரி பிரைவசி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் சிரி, டிக்டேஷன் ஆடியோ ரெக்கார்டிங் ஹிஸ்ட்ரியை அழிக்க முடியும். இந்த அப்டேட் மூலம் சிரி ஐபோனில் வரும் குறுந்தகவல்களை வாசிக்க செய்யும் அம்சத்தை மீண்டும் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo