போலி Email முகவரியை கண்டறிவது எப்படி ?

HIGHLIGHTS

ஈமெயில் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டதா என்பதை கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

போலி Email  முகவரியை கண்டறிவது எப்படி ?

நம் ஈமெயில்  முகவரிக்கு தினமும் பல ஆயிரம் ஈமெயில் உங்களின்  இன் பாக்ஸ் வந்து குவிவது வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் சில நேரம் வங்கி மற்றும் அரணசங்கத்தின் சார்ந்த ஈமெயில்வருவதுண்டு சில நேரத்தில் அது உண்மை தான என்ற குழப்பங்கள் இருந்து வருகிறது மேலும் நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது ஈமெயில் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் ஈமெயில் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அவர்கள் கொடுக்கும் ஈமெயில் முகவரிக்கு ஈமெயில் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான ஈமெயில் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட ஈமெயில் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டதா என்பதை கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க் : http://www.verifyemailaddress.org/

ஒரு ஈமெயில் சரியானதா இல்லை போலியானதா என்று அறிய நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய ஈமெயில் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும். குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும். அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo